Editorial / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்திலுள்ள உதய்பூர் மாவட்டத்தில் பாடசாலைக் கட்டிடமென்றை அமைக்க இந்திய அரசு 42.95 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.
உதய்பூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பால் மந்திர் என்ற பாடசாலையொன்றுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நேபாளத்துக்கான இந்திய தூதரகம், மத்திய விவகாரங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சு மற்றும் திரியுகா நகராட்சி ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த திங்கட் கிழமையன்று கையெழுத்திடப்பட்டது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தூதரகத்தின் அபிவிருத்தி கூட்டமைப்பு மற்றும் புனரமைப்புப் பிரிவின் தலைவர், திரியுகா நகராட்சி மேயர் மற்றும் மத்திய விவகாரங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் உள்ளக செயலாளர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
உயர் தாக்க சமூக அபிவிருத்தி திட்டமாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்கு (HICDP) நேபாள-பாரத் மைத்ரி மேம்பாட்டு கூட்டு திட்டத்தின் கீழ் 42.95 மில்லியன் இந்திய ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த செவ்வாயன்று இது குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”2003 முதல் நேபாளத்தில் 520 எச்.ஐ.சி.டி.பி திட்டங்களை இந்திய அரசு கையகப்படுத்தியுள்ளது.
அவற்றில் 448 திட்டங்கள் சுகாதாரம், கல்வி, குடிநீர், இணைப்பு, சுகாதாரம் மற்றும் பிற பொது பயன்பாடுகளை உருவாக்குதல் ஆகிய துறைகளில் முடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேபாளத்தின் எட்டு மாவட்டங்களில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சேதமடைந்த . 71 கல்வி நிறுவனங்களை இந்தியா 5800 மில்லியன் புனரமைப்பு மானியத்தின் கீழ் புனரமைத்து வருகிறது. ஏற்கனவே எட்டு பாடசாலைகள் நிறைவடைந்துள்ளன, 62 பாடசாலைகளின் பணிகள் நடந்து வருகின்றன, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
24 minute ago
38 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
38 minute ago
47 minute ago