Mithuna / 2024 ஜனவரி 08 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ஜனவரி .22-ம் திகதி கும்பாபிஷேகமும், கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரிதிஷ்டை செய்யப்படும் விழாவும் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.
கும்பாபிஷேக விழாவிற்கான வேதசடங்குகள் ஜனவரி 16 அன்று தொடங்குகிறது. வாரணாசியைச் சேர்ந்த லக்ஷ்மி காந்த் தீட்சித், ஜனவரி 22-ம் திகதி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவின் முக்கிய சடங்குகளைச் செய்வார். ஜனவரி 14 முதல் ஜனவரி 22-ம் திகதி வரை அயோத்தியில் அமிர்த மஹோத்சவ் கொண்டாடப்படுகிறது.
இந் நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக கிராமங்கள் தோறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரடியாக ஒளிபரப்ப செய்ய பெரிய திரைகள் அமைக்க தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
14 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago