Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சாபில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சராக விரும்புகின்றனர் என்றும் அங்கு அதிகாரத்துக்காக மோசமான சண்டை நடக்கிறது என்றும் டெல்லி முதலமைச்சரும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறன. அடுத்த 5 மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினையால் ஆட்டம் கண்டுவருகிறது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்துக்கு இன்று (30) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோது மேலும் கூறியதாவது,
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். ஆட்சியை மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சியினர் அரசாங்கத்தை கேலி செய்கின்றனர்.
பஞ்சாபில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல் மந்திரியாக விரும்புகின்றனர். அதிகாரத்துக்காக மோசமான சண்டை அங்கு நடக்கிறது. பஞ்சாபின் நிலைமை மோசமாக உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி மட்டுமே மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. பஞ்சாபில் அடுத்ததாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும். பஞ்சாபின் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நாங்கள் செய்ய முடியாததை வாக்குறுதியாக அளிப்பதில்லை.
அனைவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும். இதன்மூலம் மக்களுக்கு இலவச மற்றும் தரமான சுகாதாரத்தை அளிப்போம் என்று அவர் தெரிவித்தார்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025