A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் காலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
சிவகாசி - ஆலங்குளம் சாலையில் காக்கிவாடன்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர்.
அப்போது மருந்துக் கலவை அறையை திறந்தபோது உராய்வு ஏற்பட்டு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்ட மானது.இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாரனேரி பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago