Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 25 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானப் பணிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி பயணி ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் பயணித்த ‘ஸ்பைஸ்ஜெட் ‘விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று ”விமானம் புறப்படத் தயாராக இருந்த போது விமானப் பணிப்பெண் ஒருவரை, முதியவர் ஒருவர் தொட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இதனால் கோபமடைந்த அப் பணிப்பெண் சம்பந்தப்பட்ட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த நபரும் அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது ”தனது கை வேண்டுமென்றே படவில்லை என்றும், இடம் சின்னதாக இருந்ததால் கை தெரியாமல் பட்டுவிட்டதாகவும்“ அவர் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் தொடர்ந்து வாக்குவாதம் நீடிக்கவே, மற்ற பயணிகளும், விமான ஊழியர்களும் அங்கு வந்து அவர்களைச் சமாதானப் படுத்தி விலக்கிவிட்டனர் எனவும், அதன் பின்னர் குறித்த நபர் மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இருந்தபோதிலும், அவரையும், அவருடன் வந்த மற்றொரு பயணியையும் விமான ஊழியர்கள் இறக்கிவிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago