A.K.M. Ramzy / 2021 ஜூன் 01 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கும், மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே ட்விட்டரில் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே 28ஆம் திகதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய தமிழக நிதியமைச்சர், `ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு' என்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் கொள்கை ஏற்கத்தக்கதல்ல என்றும், `ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகையைக் கணக்கில் கொள்ள வேண்டும்' என்றும் கூறினார்.
''ஒரு சிறிய மாநிலமாக இருப்பதால் கோவாவின் குரலைப் பறிக்க ஜி.எஸ்.டி கவுன்சிலில் முயற்சி செய்யப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதற்காகத் தமிழக நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் மாநில நிதியமைச்சர்கள் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என கோவா சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ கூறியிருந்தார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ''ஜி.எஸ்.டி கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் நமது ஜனநாயகத்துக்கு ஒரு அவமானம். நமது மாநிலத்தின் பெருமையை இந்த செயல் கெடுக்கிறது. பிடிஆர் மன்னிப்பு கோர வேண்டும்'' என ட்வீட் செய்திருந்தார்.
சமூக வலைதளத்தில் மிகவும் தீவிர பங்கேற்பாளரான தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விஷயங்கள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவிப்பார். இந்த நிலையில், வானதி சீனிவாசனுக்கு ட்விட்டரிலே பதில் அளித்த அவர்,'' உங்கள் பொய்களில் என்னை `டெக்' செய்வதை நிறுத்திவிட்டு, ஒரு மாறுதலுக்காக உண்மையாக வேலை செய்ய முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே ஒரு பிறவிப்பொய்யரா? அல்லது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் யாரோ ஒருவர் யாரையோ அவமதித்து விட்டதாகக் கருதும் அளவுக்குக் குறைந்த ஐ.க்யூ கொண்டவரா? இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்,'' என கூறியிருந்தார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago