Freelancer / 2024 ஜூலை 08 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹரியாணா மாநிலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சுமார் 40 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பஞ்ச்குலாவில் உள்ள பிஞ்சூருக்கு அருகே நடைபெற்றுள்ளது.
விபத்தில் சிக்கிய பஸ் ஹரியாணா மாநில அரசுப் பேருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியுள்ள நிலையில், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்துள்ளது. அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தகவல்.
விபத்தை ஏற்படுத்திய பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை ஹரியாணா மாநில சாலை போக்குவரத்து பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதில் ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார். நடத்துநர் காயமடைந்துள்ளார்.
மேலும், இதில் காயமடைந்த ஒரு பெண் சண்டிகரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இகடந்த ஏப்ரல் மாதம் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.S
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago