2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகள் மீது மீண்டும் தடை

Editorial   / 2025 ஜூலை 03 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


   பாகிஸ்தான் நடிகர்கள் பலர் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சடூக ஊடக  கணக்குகள் மீது இந்தியாவில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மவ்ரா ஹோகேன், சபா கமர், அஹத் ராசா மிர், யும்னா ஜைதி மற்றும் டேனிஷ் தைமூர் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்திய பயனர்கள் பார்க்கும் வகையில் புதன்கிழமை (ஜூலை 2) வரை இருந்தன.

 அதே போல் கிரிக்கெட் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் ஷோயப் அக்தரின் யூடியூப் சேனல்களும் தெரிய ஆரம்பித்தன. இருப்பினும், ஃபவாத் கான், மஹிரா கான் மற்றும் ஹனியா ஆமிர் போன்ற பிற முக்கிய பாகிஸ்தான் நடிகர்களின் கணக்குகள் சட்டப்பூர்வ இணக்க உத்தரவின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம் மே 2025 இல் ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து உள்ளடக்கங்களையும் நிறுத்துமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், சில கணக்குகள் இந்தியாவில் மீண்டும் பயனர்கள் பார்க்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள நிலையில், அனைத்து இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (AICWA), அனைத்து பாகிஸ்தான் கலைஞர்கள் மற்றும் ஊடக சேனல்கள் மீது உடனடி மற்றும் நிரந்தர டிஜிட்டல் தடை விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட்டது. இந்தக் கணக்குகள் அணுக முடியும் வகையில் இருப்பது இந்திய வீரர்களின் தியாகங்களை அவமதிப்பதாக AICWA குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .