A.K.M. Ramzy / 2021 ஜூன் 20 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை:
துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பொலிஸார் கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவர் சென்னை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இவர் அமைச்சராக இருந்த காலத்தில் துணை நடிகை சாந்தினியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் இருவரும் நெருக்கமாக பழகியதாக தெரிகிறது. இது தொடர்பாக சாந்தினி அடையாறு மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரில் மணிகண்டன் திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகவும், 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றில் முன் முன்பிணை மனு தாக்கல் செய்தார். ஆனால் சில வாரங்கள் அளிக்கப்பட்ட முன் முன்பிணை நீதிமன்றம் விலக்கி கொண்டது.
இந்த வழக்கு தொடர்பாக 2 தனிப்படை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இவரை பொலிஸார் கைது செய்ய முயற்சித்தபோது தமிழகத்தை விட்டு தப்பியதாக தெரியவந்தது. இதனையடுத்து சைபர் குற்றப் பொலிஸ் மற்றும் உறவினர்கள் உதவியுடன் மணிகண்டன் பெங்களூருவில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து பொலிஸ் பெங்களூருக்கு விரைந்து சென்று மணிகண்டனை கைது செய்தனர். இவர் சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்.
56 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
4 hours ago