Freelancer / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மோடியின் பிறந்த நாளானஇன்று (செப்.,17) விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுவதால், பா.ஜ., பிரமுகர் ஒருவர் அவரின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்று (செப்.,17) பிரதமர் நரேந்திர மோடிக்கு 74வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேநாளில் விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள வேத பாடசாலையில் பா.ஜ., பிரமுகர் ஒருவர், பிரதமர் மோடியின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்.
பிரதமர் மோடியை கடவுளாக சித்தரித்து அபிஷேகம் செய்த இந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து அந்த பா.ஜ., பிரமுகர் கூறுகையில், “நவீன இந்தியாவின் விஸ்வகர்மா பிரதமர் மோடி தான். அவர் நம் நாட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார்” என்றார்.S
20 minute ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
11 Apr 2026
11 Apr 2026