2025 ஜூலை 23, புதன்கிழமை

புகைப்படக் கலைஞர்களின் கெமராக்கள் பறிமுதல்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 15 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதி மலையில், தேவஸ்தானத்தின் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களின்  கெமராக்களை, தேவஸ்தான அதிகாரிகள்  பறிமுதல் செய்து உண்டியல் நிர்வாகிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த புகைப்படக்  கலைஞர்கள்  பக்தர்களுக்குத்  தொல்லை கொடுப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே  இக் கெமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஏழுமலையான் உண்டியலில் சமர்ப்பிக்கப்படும் பொருள், தேவஸ்தானத்திற்கே சொந்தமாகும் என்பதால், ஏலத்தின் மூலம் மாத்திரமே குறித்த  கெமராக்களை திரும்ப பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .