Freelancer / 2023 ஜூலை 25 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாசிக் மாவட்டம் மலேகாவ் தாலுகா போகனே சிவார் கிராமத்தில் தனது பெற்றோருடன் சிறுவன் வசித்து வந்ததுள்ளான்.
மற்ற சிறுவர்களுடன் வீட்டருகே உள்ள மைதானத்தில் கடந்த 16-ந் திகதி விளையாட சென்ற குறித்த சிறுவன் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
இந் நிலையில் சம்பவத்தன்று சிறுவனை அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் சேர்ந்து கடத்தி சென்றது பொலிஸாருக்கு தெரியவந்தது. அந்த 4 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்தனர்.
புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்ததாகவும், அங்குள்ள மைதானத்தில் சிறுவனின் உடலை புதைத்து வைத்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அங்கு சென்று பாதி புதைந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டுள்ளனர்.
14 minute ago
3 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
19 Apr 2026