Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதையல் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமது நண்பனின் மகனை இளைஞர்கள் இருவர் நரபலி கொடுத்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லி பகுதியில் உள்ள லோதி காலனியில், பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பீகாரை சேர்ந்த விஜயகுமர், அமர் குமார் ஆகியோர் அங்கு பணிபுரிந்து வந்துள்ள நிலையில், புதையல் மீது ஆர்வம் கொண்டிருந்த இருவரும் தன்னுடன் பணிபுரியும் சக நண்பரின் மகனான 6 வயதுச் சிறுவனை நரபலி கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 1 ஆம் திகதி குறித்த சிறுவனைக் கடத்திய இருவரும் அவனுக்கு போதைப் பொருளைக் கொடுத்து மயக்கமடையச் செய்து, பின்னர் தங்களது குடிசைக்குள் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவன் காணமற் போனதால் அச்சமடைந்த அவனது பெற்றோர் அவனை ஊர் முழுவது தேடியுள்ளனர்.
இதன்போது அவர்கள் தற்செயலாக விஜயகுமார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டிலுக்குக் கீழ் இரத்தம் கசிந்திருப்பது தெரியவந்தால் சந்தேகமுற்று இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் அச்சிறுவனை நரபலி கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
4 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
26 Jul 2025