Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 நவம்பர் 08 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மராட்டியத்தில் 11 ஆண்டுகளாக மருத்துவமனை ஒன்றில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அனைத்து கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
மராட்டியத்தின் புனே நகரில் ஹடாப்சர் என்ற பகுதியில் பிரசவம் உள்ளிட்ட பன்னோக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்று செயற்பட்டு வருகின்றது.
இதன் வைத்தியரான கணேஷ் ராக், அரசின் பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தினை 11 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றார்.
இதன்படி, இவரது மருத்துவமனையில் பிறக்க கூடிய பெண் குழந்தைகளுக்கு அனைத்து மருத்துவ கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதுபற்றி வைத்தியர் கணேஷ் ராக் கூறும்போது,” இதுவரை எனது மருத்துவமனையில் 2,430 பெண் குழந்தைகள் பிறந்து உள்ளன.
அவர்களின் பெற்றோரிடம் சிகிச்சை கட்டணம் எதுவும் பெறவில்லை. பாலின வேற்றுமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, விழிப்புணர்வை உண்டாக்க இந்த முறையை பின்பற்றி வருகிறோம்” என கூறியுள்ளார்.
இவரது மருத்துவமனையில் ஒவ்வொரு முறையும் பெண் குழந்தைகள் பிறக்கும்போது அதனை சிறப்புடன் கொண்டாடுகின்றனர். பலூன் மற்றும் பூக்களை கொண்டு அலங்காரம் செய்து, கேக் வெட்டி, பெற்றோர் மீது பூக்களை தூவியும் அனைவரும் அதனை மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.
மேலும் பிறந்த குழந்தை மற்றும் தாய் இருவரையும் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன், அலங்கரிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றில் வீடு வரை கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago