A.K.M. Ramzy / 2021 மார்ச் 31 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை:
பொலிவுட் நடிகர் அஜாஸ் கான் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அஜாஸ் கான் ராஜஸ்தானில் இருந்து நேற்று இரவு மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் அவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் அழைத்துச் சென்று தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு போதைப் பொருள் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.
வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அஜாஸ் கானின் வீட்டில் போதை மாத்திரைகள் கிடைத்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷாதாப் பாரூக் ஷாயிக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் அஜாஸ் கான் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்து.
கடந்த வியாழக்கிழமை ஷாதாப் பாரூக் ஷாயிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட மெபெட்ரோன் என்ற போதை மருந்து 2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
16 minute ago
24 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
51 minute ago
54 minute ago