Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் இருந்து இங்கு கொண்டு வந்து பெட்டிக்கடை முதல் பெரிய கடை வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. இந்தநிலையில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் மு.க.
தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு அரங்குகள், பள்ளி வளாகங்களில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கரூரில் சீருடை அணிந்திருந்த பாடசாலை மாணவிகள் மூவர் போதை மயக்கத்தில் நடுவீதியில் தடுமாறி விழுந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி கடைக்காரர்கள், ஏதோ உடல்நலக்குறைவால் இப்படி ஆகியிருக்கலாம் என்று நினைத்து 108 அம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர்.
அம்புலன்ஸை கண்டதும் ஒரு மாணவி சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து நழுவி சென்று விட்டார். மற்ற இரண்டு மாணவிகளால் நகர முடியவில்லை. அந்த மாணவிகள் போதையில் திளைத்திருப்பது தெரிந்தது.
இந்த நிலையில் ஒயின் குடித்தால் மேலும் கலராக மாறலாம் என யாரோ சொன்ன தகவலை கேட்டு தெரிந்தவர்கள் மூலமாக வைன் வாங்கி குடித்ததாக, அம்மாணவிகள் மூவரும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
10 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago