2025 ஜூலை 23, புதன்கிழமை

மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 14 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் கடந்த 6ஆம் திகதி தனது  வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் குறித்த சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது அவரது வீட்டில் இருந்து 5 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், தனது தற்கொலைக்கு காரணம்  தனது வளர்ப்புத்  தாய், மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

 இதனைத்  தொடர்ந்து குறித்த 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அந்தவகையில் ‘தனது உறவினர்களைச் சிக்க வைக்க சிறுமியின் தந்தையான 40 வயது நபரே தனது மகளைக்  கொலை செய்துள்ளார் என்பதும்  அந்நபரின் தொலைபேசியை  ஆய்வு செய்ததில், சிறுமியை தற்கொலை கடிதத்தையும் அவரே வற்புறுத்தி எழுத வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் அச்சிறுமியிடம் மின் விசிறியில்  தூக்கிடுவது போன்று நடிக்குமாறும், தான் காப்பாற்றுவதாகவும்  கூறி அவரைத் தூக்கில் தொங்க வைத்து காப்பாற்றாமல் அவர் துடிதுடித்து இறப்பதை தனது தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் இதனை தனது மற்றொரு மகளான 12 வயது சிறுமியையும் பார்க்கவைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரைக் கைது செய்தபொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .