Freelancer / 2025 ஜூன் 08 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி - குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகினார். இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டு, பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியுள்ளது.
இந்நிலையில், மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் பொலிஸார், சனிக்கிழமை (7) இரவு கைது செய்தனர்.
இதை எதிர்த்து மெய்தி மக்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டனர். இதனால், மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை சனிக்கிழமை (7) இரவு 11.45 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய 5 மாநிலங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
38 minute ago
51 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
51 minute ago
53 minute ago
1 hours ago