2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

“மணிப்பூரை விட இஸ்ரேல் மீது தான் ஆவல் அதிகம்”

Freelancer   / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரமும் ஒன்றாகும். 40 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு நவம்பர் 7-ந்திகதி தேர்தல் நடக்கிறது.

இந் நிலையில் ராகுல் காந்தி திங்கட்கிழமை (16) மிசோரமில் பாத யாத்திரை மேற்கொண்டார். ஜஸ்வால் சென்ற அவருக்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர். அங்குள்ள சன்மாரி சந்திப்பில் இருந்து அவர் பாத யாத்திரையை தொடங்கினார்.

பேரணிக்கு பிறகு கவர்னர் மாளிகை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது மணிப்பூர் தற்போது ஒரு மாநிலமாக இல்லை. இரண்டு மாநிங்களாக பிரிந்து நிற்கின்றன. இவ்வளவு நடந்தும், மணிப்பூர் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தோன்றவே இல்லை. மணிப்பூரில் என்ன நடக்கிறது என அறிவதை விட, இஸ்ரேலில் என்ன நடக்கிறது என அறிவதில்தான் பிரதமர் மோடி ஆவலாக உள்ளார். என குறிப்பிட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X