2025 ஜூலை 23, புதன்கிழமை

மனைவியை விலைபேசிய கணவர் ; தந்தைக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணத்திற்காக நபர் ஒருவர் தனது மனைவியை தொழிலதிபர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கிரா பாரூக் என்பவருக்கும், நார்லா கிராமத்தைச் சேர்ந்த பூர்ணமி என்ற பெண்ணுக்கும் ஒரு வருடத்திற்கு முன்னர்  திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் ஒக்டோபர் 30 ஆம் திகதி, இருவரும் பணி நிமித்தம் டெல்லிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

 நவம்பர் 2ஆம் திகதி, பாரூக், 5 லட்ச ரூபாய்க்கு ஈடாக, அவரது மனைவியை அங்குள்ள தொழிலதிபர் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மொத்த திருமணம் குறித்த ஆதாரங்களும் தொழிலதிபரின் கைபேசியில் பதிவாகியுள்ளது, இந்நிலையில் பூர்ணமி தனது தந்தைக்கு இதனை அனுப்பி தன்னைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

 இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பெண்ணின் தந்தை இது குறித்து பொலிஸ் நிலையத்தில்  புகார் அளித்ததைத்  தொடர்ந்து , கிரா பாரூக்கைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .