Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் இவ்வாறாகப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் ஒக்டோபர் 01 காலை 6 மணியளவில் பரிசோதனை நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், “ ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என முதல்வர் பதிவிட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த், சிகிச்சையை முடித்துக்கொண்டு, ஒக்டோபர் 1ஆம் திகதி பகல்வேளையிலேயே வீடு திரும்பிவிட்டார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago