Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜூலை 18 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
தன்னையும், தன் குழந்தையையும் ஏமாற்ற முயன்ற நபரை, டி.என்.ஏ., சோதனை மூலம் அம்பலப்படுத்தி, வெற்றி கண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர், செம்பியத்தை சேர்ந்தவர் இளவரசிக்கும், ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகோபாலன் என்பவருக்கும், 1975 ஆம் ஆண்டு பெங்களூரில் காதல் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து, சென்னையில் ஏழு மாதங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின், வேலைக்கு செல்வதாகக் கூறிய கணவன், மனைவியை பிரிந்து ஐதராபாத் சென்றுள்ளார். அந்த கால கட்டத்தில் இத்தம்பதிக்கு, பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், 1985 ஆம் ஆண்டு விஜயகோபாலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தகவல், இளவரசிக்கு தெரியவந்தது. இது குறித்து, பொலிஸில் புகார் அளித்தார். விசாரணையில், இளவரசி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை ஆகிய இருவருக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என, விஜயகோபாலன் கூறினார். டி.என்.ஏ. மரபணு சோதனை செய்து நிரூபித்தால், இருவரையும் ஏற்பதாகவும் கூறினார். இதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, டி.என்.ஏ., சோதனை செய்து, விஜயகோபாலன் தான் குழந்தையின் தந்தை என நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில், இளவரசி, தன்னையும் தன் மகளையும் தவறாக பேசிய விஜயகோபாலன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொலிஸில் புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றிய கணவனை தண்டிக்க, பல ஆண்டுகளாக போராடி வரும் மூதாட்டியின் தளராத மன உறுதியை, சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago