A.K.M. Ramzy / 2021 மே 23 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் இன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் இளம் வயதினர் பலரும் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத கர்ப்பிணியான கார்த்திகா (29 வயது) என்ற மருத்துவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா, முதுநிலை பயற்சி மருத்துவர். இவருக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.
குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. திருவாண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்றவர், தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை அப்பலோ மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார்.
கர்ப்பிணி மருத்துவருக்கு ஒக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதால், வானகரம் அப்பலோ மருத்துவனையில் இருந்து கடந்த 19ஆம் திகதி கிரீம்ஸ் ரோடு அப்பலோவில் அனுமதிக்கப் பட்டார்.இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார்.
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago