2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மாணவனுக்கு பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்தேன்: மாணவியின் தாயார் வாக்குமூலம்

Editorial   / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், ரேஷன்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு பால மணிகண்டன்(வயது 13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பாலமணிகண்டன், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பாலமணிகண்டன் வீட்டுக்கு வந்துள்ளான். சிறிது நேரத்தில் பாலமணிகண்டன் திடீரென வாந்தி எடுத்துள்ளான். இதனையடுத்து மாலதி தனது மகனை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மாணவனிடம் குடித்த குளிர்பானத்தை அவனது தாய் கொடுத்ததாக பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த, மாலதி தனது கணவர் ராஜேந்திரனுடன் பள்ளிக்கு சென்று பள்ளி காவலாளியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில், பள்ளி நிர்வாகத்தினர், காவலாளியை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பள்ளியில் பாலமணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவி ஒருவரின் தாயார், காவலாளி தேவதாசிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து காரைக்கால் நகர பொலிஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகன் பாலமணிகண்டன் கல்வி மற்றும் இதர கலைகளில் சிறந்து விளங்குவதால், இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார். இதனிடையே விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.

 மாணவியின் தாயாரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் தன் மகளை விட பாலமணிகண்டன் நன்றாக படித்து வந்ததால் அவருக்கு குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக   வாக்குமூலம் அளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X