A.K.M. Ramzy / 2021 மே 24 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லி
கொரோனா தடுப்பு மருந்து நிறுவனங்களான பைசரும், மாடர்னாவும் நேரடியாக மாநில அரசுகளிடம் கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியாது என்று கூறியுள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில் 18 முதல் 44 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து போடும் திட்டத்தை கடந்த சனிக்கிழமை தொடங்க அரசு உத்தேசித்திருந்தது. ஆனால், போதிய தடுப்பூசி இல்லாததால் அந்த பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "நேரடியாக கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்க அமெரிக்க நிறுவனங்களான ஃபைசர், மாடர்னாவிடம் கோரினோம்.
ஆனால், நேரடியாக மத்திய அரசுடன்தான் நாங்கள் பேசுவோம் என்று கூறின. எனவே, டில்லிக்கு தேவைப்படும் கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்து வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறினார்.
9 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
06 Mar 2026