2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மின்னல் தாக்கியதில் 28 பேர் பலி

Editorial   / 2021 ஜூலை 12 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட இந்தியாவில் பல பகுதிகளில் பெய்து வரும் அடை மழையுடன்,  ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன்,   10 ஆடுகள், ஒரு பசு என மொத்தம் 13 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

இதில் 18 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதுடன், 7 குழந்தைகளும் உயிரிழந்தவர்களுள் அடங்குவதுடன், ஜெய்ப்பூர்- ஆம்பர்கோட்டை மலைப்பகுதியில் செல்பி எடுத்த 11 பேரும் மின்னல் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X