Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் இந்நடவடிக்கைக்கு ஒரு புறம் ஆதரவும், மற்றொரு புறம் எதிர்ப்பும் இருந்து வருகின்றது.
அந்த வகையில், சென்னை தாம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றுவற்காக அதிகாரிகள் சென்ற போது, அதனை அறிந்த அப்பகுதி மக்கள் அக்கோவிலை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த பெண் சாமியார்ஒருவர் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மிளகாய்த்தூள் அபிஷேகம் செய்து ”உன் இடத்தை எவன் அனுபவிக்க நினைக்கிறானோ அவனை சுடுகாட்டுக்கு கொண்டு வரவேண்டும்” என்று கோபத்தோடு சாபம் விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளதுடன், கோவில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அக் கோவிலை அகற்ற கால அவகாசம் வழங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago