A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை;
நடிகையுடன் குடும்பம் நடத்தி, அவரை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்ததுடன், அந்தரங்க படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, 341 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அ.தி.மு.க., ஆட்சியில், 2017ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தார். இவர் மீது நடிகை சாந்தினி, 36 என்பவர் சென்னை பொலிஸ் ஆணையாளர்அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், 'சென்னை பெசன்ட் நகரில், வாடகை வீட்டில் என்னுடன் அமைச்சர் மணிகண்டன் சட்ட விரோதமாக குடும்பம் நடத்தினார். மூன்று முறை கர்ப்பமாக்கி, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார். 'அடித்து துன்புறுத்தினார்; பண மோசடி செய்தார். திருமணம் செய்ய மறுத்ததுடன், அந்தரங்க படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்' எனக் கூறியிருந்தார்.
அடையாறு மகளிர் பொலிஸார் வழக்குப் பதிந்து, பெங்களூரு பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை ஜூன் மாதம் கைது செய்து, சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். அங்கு சொகுசு வாழ்க்கை நடத்தியதால், மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது, நிபந்தனை பிணையில் வெளியே உள்ளார்.இவர் மீதான வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மணிகண்டனுக்கு எதிராக, சாந்தினி உட்பட ஐந்து பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
30 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
47 minute ago