A.K.M. Ramzy / 2021 ஜூன் 10 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மும்பை:
மராட்டிய மாநிலத்தில் கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் முதல் கட்டமாக 9 பேர் உயிரிழந்தனர். தற்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனால், குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்விடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்த மராட்டிய அமைச்சர்அஸ்லாம் ஷைக், மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தொய்வின்றி நடப்பதாகவும் குறிப்பிட்டார்.
6 minute ago
16 minute ago
21 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
21 minute ago
36 minute ago