Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீண்டும் 26/11 போன்ற தாக்குதல் நடத்தப்படும் என்று மும்பை பொலிஸாருக்கு வட்ஸ் அப்பில் வந்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மும்பையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் 10 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டவர் உள்பட 150 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அதேபோன்ற தாக்குதல் என்ற எச்சரிக்கை வந்துள்ளதாகவும் இது குறித்து மும்பை தீவிரவாத தடுப்புக் குழு, மும்பை பொலிஸார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அண்மையில் ஆயுதங்களுடன் ஒரு கப்பல் ராய்கட் பகுதியில் கரை ஒதுங்கி அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்நிலையில், இந்த வட்ஸ்அப் எச்சரிக்கை வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து 190 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ராய்காட் கடல் பகுதியை மர்ம படகு நேற்று நெருங்கியது.
அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படகு குறித்து பொலிஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆயுதங்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .