2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம்கள் இல்லாத ஊரில் முஹர்ரம் அனுசரிக்கும் இந்துக்கள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹர்ரம் மாத‌த்தின் 10 ஆம் நாளில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் முஹர்ரம் நோன்பு அனுசரிக்கிறார்கள்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹிரேபிதனூர் கிராமத்தில் இந்து ம‌க்களும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக முஹர்ரம் அனுசரித்து வருகின்றனர்.

சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம்கூட இல்லை. ஆனால் அங்குள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் மாத‌த்தில் 5 நாட்கள் நோன்பு அனுசரிக்கின்றனர்.  

கர்நாடகாவில் இந்து - முஸ்லிம் மக்களிடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்து மக்கள் முஹர்ரம் அனுசரிக்கும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X