Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேலை தேசிய பாதுகாப்பு படை வீரர் தடுத்தது சர்ச்சையாகி இருக்கிறது.
குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதற்காக அடிக்கடி பிரதமர் மோடி குஜராத் சென்று பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார்.
சமீபத்தில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மோடியின் காரில் ஏற முயன்ற அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவில், குஜராத் முதல் மந்திரி பிரதமரின் காரில் ஏறமுயற்சிப்பதை காணலாம், பாதுகதப்பு அதிகாரிகள் படேலை காருக்குள் நுழைய விடாமல் தடுப்பதைக் காணலாம்.
ஒரு மாநிலத்தின் முதல் மந்திரி இவ்வாறு பாதுகாப்பு படை வீரரால் அவமதிக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.
"தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரி என்ன நிலையை எதிர்கொண்டுள்ளார் என பாருங்கள். ஒரு பா.ஜ.க முதல் மந்திரி மோடி ஜியிடம் இந்த அவமானம் பெற வேண்டும் என்றால், சாமானியர்களின் நிலையை கற்பனை செய்து பாருங்கள்!" என்று டுவிட் செய்துள்ளனர்.
அந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், "படேல் சமூகத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது, குஜராத் முதல் மந்திரி காருக்குள் உட்கார விரும்பினார், ஆனால் காரின் பின்னால் ஓடுங்கள், நீங்கள் என் பக்கத்தில் உட்காரத் தகுதியற்றவர்" என்று பிரதமர் கூறினார் என்றார்.
படேல் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
53 minute ago
56 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
56 minute ago
4 hours ago