Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 26 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகுல்காந்தியை, திங்கட்கிழமை (26),நேரில் ஆஜராக வேண்டும் என்று பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், சாய்பாசாவில், 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அப்போதைய பா.ஜனதா தலைவர் அமித்ஷா பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.
இது தொடர்பாக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. அங்குள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இது பற்றிய வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, ராகுல்காந்தி தரப்பில் ஜார்கண்ட் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்கள் பிடியாணை பல மாதங்கள் நிறுத்தி வைத்து இருந்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், ராகுல்காந்தியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், கீழ் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மீண்டும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ராகுல்காந்தியின் சட்டத்தரணி முறையிட்டார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல்காந்தி திங்கட்கிழமை (26) நேரில் ஆஜராக வேண்டும் என்று பிணையில வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதுபோன்ற மற்றொரு அவதூறு வழக்கு சுல்தான்பூர் நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், அந்த நீதிமன்றத்தில் ராகுல்காந்தி நேரில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
21 minute ago
23 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
23 minute ago
23 minute ago