2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ராகுல்காந்தியுடன் இணையும் கமல்ஹாசன்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை,  பாதயாத்திரையொன்றை மேற்கொண்டு வருகின்றார்.

 அந்தவகையில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி தொடங்கிய இப்பாத யாத்திரையானது தற்போது  100ஆவது நாளை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இப் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி டெல்லியில் வரும் 24 ஆம் திகதி நடைபெற உள்ள பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .