2025 ஜூலை 23, புதன்கிழமை

வழக்கை ஒத்திவைத்த நீதிபதி; கத்தியைக் காட்டி மிரட்டிய குற்றவாளி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 30 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒடிசாவில் நீதிமன்றத்தில் வைத்து நீதிபதியிடம் குற்றவாளியொருவர்
கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டதில் பெர்ஹாம்பூர் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றத்திலேயே நேற்று முன்தினம்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று காலை  நீதிபதி பிரக்யான் பரமிதா பிரதிஹாரி என்பவர் நீதிமன்ற பணிகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்குவந்த பாகாபன் சாஹூ (50) என்பவரின்  வழக்கு விசாரணையை பிற்பகல் ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.  

இதனால் ஆத்திரமடைந்த அவர் நீதிமன்ற விசாரணை அரங்கில் நின்றுக்கொண்டிருந்த  வேளை திடீரென கத்தியை எடுத்து நீதிபதியை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். 

இதைக்கண்ட அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்கள், சாஹூவிடம் சாமர்த்தியமாக போராடி கத்தியை பிடிங்கி, நீதிபதியை மீட்டனர்.

இதையடுத்து, குற்றவாளி சாஹூ அங்கிருந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

கைதானா சாஹூ மீது கொலை முயற்சி உள்பட நான்கு குற்ற வழக்குகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த மிரட்டலுக்கான காரணம் குறித்து விரிவான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. தொடர் விசாரணை நடந்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .