A.K.M. Ramzy / 2021 மே 19 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை:
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால்,இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், உடல்நலக் குறைவால், சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டு, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்தே, விஜயகாந்த் வீட்டிலேயே இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில், பங்கேற்பதுமில்லை.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, அவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்றிருந்தார்.
14 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago