2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

’விநாயகர் சிலை ஊர்வலத்தை தடுக்காதீர்’

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திண்டுக்கல்

'விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசாங்கம் தடுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,'என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:செப்டெம்பர் 10ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. தமிழகம் முழுதும் 1இலட்சத்து 25ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசாங்கம் தடுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்.

விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .