A.K.M. Ramzy / 2021 ஜூன் 16 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

கேரளா
கேரளா கண்ணூரிலிருந்து வந்த விமானம், ஹுப்பள்ளியில் தரையிறங்கும் போது டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
கேரளாவின் கண்ணூரிலிருந்து, 6 - 7979 என்ற எண் கொண்ட, 'இண்டிகோ' விமானம் நேற்று முன்தினம் ஹுப்பள்ளி விமான நிலையத்துக்கு வந்தது. தரையிறங்கும் போது டயர் வெடித்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் வந்து பாதிப்பு குறித்து ஆராய்ந்தனர்.
டயரில் காற்று குறைவாக இருந்ததால், தரையிறங்கும் போது அதிக அழுத்தத்தால் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த ஏழு பயணிகள், ஊழியர்கள் உயிர் தப்பினர். பின் விமானம் பராமரிப்பு பணிக்காக அங்கேயே நிறுத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனால், ஹுப்பள்ளியிலிருந்து அந்த விமானத்தில், பெங்களூரு புறப்படவிருந்த, 18 பயணிகளின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. வேறு விமானம் மூலம் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டனர்.
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago