Freelancer / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு ஒக்டோபர் 8-ந் திகதி தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் அதன் பங்களிப்பை பாராட்டி, 1945-ம் ஆண்டு அதன் பெயர் 'ராயல் இந்திய விமானப்படை' என்று மாற்றப்பட்டு அதற்கென ஒரு கொடியும் உருவாக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 'இந்திய விமானப்படை' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. அதன் கொடியும் மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்திய விமானப்படைக்கும் ஞாயிற்றுகிழமை (08) புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 91-வது இந்திய விமானப்படை தினத்தில், புதிய கொடியை விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிமுகப்படுத்தினார். அந்த கொடி, நீல நிற பின்னணியில் அமைந்துள்ளது. இடதுபுறம், தேசிய கொடியும், வலதுபுற மேல்பக்கத்தில், 4 சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னத்துடன், விமானப்படை சின்னம் அமைந்துள்ளது. அதில், 'சத்யமேவ ஜெயதே' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் கீழே, இமயமலை கழுகு சிறகு விரித்து பறப்பது போன்ற படம், நீலநிற வளையத்துக்கு உள்ளே அமைந்துள்ளது. அதில், 'பாரதீய வாயுசேனா' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய கொடியை பிடித்தபடி, விமானப்படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.
33 minute ago
57 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
57 minute ago
59 minute ago
1 hours ago