2025 ஜூலை 23, புதன்கிழமை

வைரலாகும் `குரங்குப் பையன்`

Ilango Bharathy   / 2022 நவம்பர் 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 மத்தியப் பிரதேச மாநிலம், நந்த்லேடா கிராமத்தைச் சேர்ந்த ‘லலித்‘ என்ற இளைஞர் தனது  ஆறு வயதிலிருந்தே ‘ஹைபர்டிரிகோசிஸ்‘ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

‘ஹைபர்டிரிகோசிஸ்‘ எனப்படுவது மனித உடல் பாகங்களில் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது  ஆகும்.

இதனை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகின்றனர். முதல்வகை உடல் பாகம் முழுவதும் அதிகமான முடி வளர்வது, இரண்டாவது வகை சில குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து ஏனைய பாகங்களில் அதிகமான முடி வளர்வது.

அந்தவகையில்  லலித்தின் உடல் முழுவதும் முடி எக்கச்சக்கமாக வளர்ந்துள்ளது. இதுகுறித்து லலித் கூறுகையில்” பாடசாலையில் சக மாணவர்கள் என்னைக் "குரங்குப் பையன்" என்று அழைக்கிறார்கள்.  

அவர்களை நான் கடிப்பேன் என்று பயப்படுவதாகவும் கூறுகின்றனர். சிறு குழந்தைகள் என்னைக் கண்டால் பயப்படுவார்கள்.

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறேன். என் தந்தை ஒரு விவசாயி, நான் தற்போது 12 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றேன். அதே நேரத்தில் எனது தந்தையின் விவசாய வேலைகளில் நான் உதவுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”உலகில் ஐம்பது பேர் மாத்திரமே  இவ்வகை  அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மனிதர்களில் இருந்து நான் வித்தியாசமானவன்; தனித்துவமானவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நமது வேறுபாடுகள்தான் நம்முடைய மிகப்பெரிய பலம், நான் நானாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் ”எனத் தெரிவிதுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .