Editorial / 2021 மே 13 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறைகள் நிலவிவருகின்றன.

குறிப்பாக வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பற்றாக்குறை காணப்படுவதால் வைத்தியசாலைகள் அண்மைக்காலமாகத் திணறிவருகின்றன.
இந் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஒட்சிஜன் உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசும் ,உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டதோடு அங்கு கண்காணிப்பு குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
இக் குழுவினர் ஆலையில் ஆய்வு செய்து உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இரவு, பகலாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடைபற்றது.
இந்நிலையில் ஒட்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லொறிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்தவகையில் நேற்றிரவு ஆலையில் ஒட்சிஜன் உற்பத்தி தொடங்கியதோடு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி அளவில் ஒட்சிஜன் டேங்கர் லொறிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படும் என்று ஆலை வட்டாரங்கள் தெரிவித்தன.
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago