Mithuna / 2024 ஜனவரி 30 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநிலம், போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர் 103 வயதான இவர். சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.
முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி காலமான நிலையில் தனியாக வசித்து வந்தார். தனக்கு ஆறுதலாக, அன்புடன் கவனிப்பதற்கு யாரும் இல்லாததால் மனவருத்தத்தில் இருந்த அவர், 49 வயது நிரம்பிய பிரோஸ் ஜகான் என்ற பெண்ணை மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், ஓராண்டு கழித்து அவர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது. திருமணம் முடிந்து புது மனைவியை ஓட்டோவில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது ஹபிப் நாசருக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் அவரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
21 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago