A.K.M. Ramzy / 2021 மே 20 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவிநாசி:
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் உள்ள 'நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா' வளாகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மதியம்(20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு, சான்றிதழ் வழங்கினார்.
பின், திருப்பூர் தொழில் துறையினர், முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினர். முதல்வருடன் சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியம் பங்கேற்றார். செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .