Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆக்ராவில் பெண்ணொருவர் தனது தந்தையால், 36 வருடங்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் குன்றியவர் எனக் கருதப்பட்ட `சப்னா ஜெயின்` என்ற பெண்ணே இவ்வாறு தனது தந்தையால் அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.
அவருக்கு தண்ணீர் மற்றும் உணவு கதவின் இடைவெளி வழியாக வழங்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் அவரது தந்தை மரணமடைந்துள்ள நிலையில், இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் என்.ஜி.ஓக்கள் இணைந்து அவரை மீட்டுள்ளனர்.
17 வயதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட சப்னாவுக்கு, தற்போது 53 வயது எனவும், அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், சில வாரங்களில் அவர் முழுமையாகக் குணமடைந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago