Freelancer / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளா மாநிலம் ஆலுவா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, இருவரும் குழந்தைக்கு பெயர் வைப்பதில் பிடிவாதம் காட்டினர்.
கணவர் கூறும் பெயர் மனைவிக்கு பிடிக்காமலும், மனைவி கூறும் பெயர் கணவனுக்கு பிடிக்காமலும் இருந்ததால், நான்கு வயது வரை குழந்தைக்கு பெயர் வைக்கப்படவில்லை. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வாங்கிய போதும் அதில் அவர் பெயரை குறிப்பிடவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக தாயார் சென்றபோது, பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாததால், பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மகளின் பெயரை பதிவு செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போதும், கணவன், மனைவி இருவரும் நேரில் வந்தால் மட்டுமே குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய மகளுக்கு புண்யா நாயர் என்று பெயர் சூட்ட விரும்புவதாகவும், கணவன் பத்மா நாயர் என்று பெயரிட விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் இந்த பிரச்சினையில் உரிய தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் குழந்தையின் தாய் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி குழந்தைக்கு நீதிமன்றமே பெயர் வைக்கும் என உத்தரவிட்டார். தன்னுடைய உத்தரவில், தாயின் பாதுகாப்பில் உள்ள குழந்தைக்கு தாய் தெரிவித்துள்ள பெயரையும் அதன் பின்னால் தந்தை பெயரையும் சேர்த்து புண்யா பாலகங்காதரன் நாயர் அல்லது புண்யா பி நாயர் என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
29 minute ago
53 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
53 minute ago
55 minute ago
1 hours ago