Editorial / 2021 மே 11 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக புதுடெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலுள்ள கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு படுக்கை வசதிகள் இல்லாமலும் ஒட்சிசன் பற்றாக்குறையாலும் வைத்தியர்கள் திணறிவருகின்றனர்.
இந்நிலையில் புதுடெல்லியிலுள்ள வைத்தியசாலையொன்றில் பணியாற்றிவந்த 80 மருத்துவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குறித்த வைத்தியசாலையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வௌிநோயாளிகள்,அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை உட்பட வைத்தியசாலையிலுள்ள அனைத்து பிரிவுகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .