Freelancer / 2022 நவம்பர் 19 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா கூறி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா அதிபர் ஜிம்ஜாங் உன், அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனையை கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும் போது,
வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தி தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும், இந்த அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு முழுமையான மோதலை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அச்சுறுத்தல்கள் பகைமை கொள்கையை தொடர்கிறது.
இது அணு ஆயுத தடையை எதிர்த்து பெரிய அளவில் சோதனை செய்ய வடகொரியாவை தூண்டி வருகிறது என்றார். R
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026