Janu / 2026 ஜனவரி 06 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் போது தங்களது நாட்டைச் சேர்ந்த 32 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக கியூபா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் “வெனிசுலா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் கியூபாவின் ராணுவ மற்றும் காவல் துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்த நிலையில் வெனிசுலாவை சுற்றிவளைத்து அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதலில் 32 கியூபா அதிகாரிகள் உயிரிழந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்த போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேற்று (சனிக்கிழமை) கியூபா மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த நிறைய பேர் கொல்லப்பட்டனர் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், எங்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை” என்றார்.

4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago