2025 மே 19, திங்கட்கிழமை

அமெரிக்கா செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூன் 11 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் கொரோனா தீவிரம் குறைந்து வருவதையடுத்து, பல நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவும் தமது நாட்டிற்குள் வருகைத் தரும் வேறு நாட்டு பிரஜைகளுக்கு கொரோனா பரிசோதனை அவசியமற்றது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸிற்கு எதிராக தமது நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகரமான நகர்வுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளைய தினம் முதல் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக மேலும்  தெரிவிக்கப்படுகின்றது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X