2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

கொழும்பு மக்களுக்கு முக்கிய செய்தி

Freelancer   / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளில் 9 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, நாளை மறுதினம் (06) காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த. தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான. மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .